கடந்த 24 மணித்தியாலத்தில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பதிவு செய்தது அமெரிக்கா!

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.

கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, அமெரிக்காவில் 750பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் உயிரிழந்த 1,422பேருடன் ஒப்பிடும் போது, அரைவாசியாகும்.

கடந்த நாட்களில் மிகப்பெரிய அழிவினை சந்தித்த அமெரிக்காவிற்கு, இந்த குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் புதிததாக 20,329பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில், இதுவரை 1,367,638பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80,787பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 1,030,515பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 256,336 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16,514பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.