அமேசானில் மாஸ்டர் ரிலீஸ் ஆகாம இருக்க காரணமே வேற.. ஒரு படத்துக்குள்ள ஓராயிரம் ரகசியமா

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படம், OTT பிளாட்பார்மில் வருவதற்கு பல காரணங்கள் இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், கூறுகையில் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் திட்டவட்டமாக OTT பிளாட்பார்மில் மாஸ்டர் ரிலீஸ் பண்ண மாட்டோம் என்று தெரிவித்து விட்டாராம்.

அதற்கு அவர் கூறிய காரணங்கள் மற்றும் ஆலோசித்த காரணங்கள் என்று பார்த்தால் ஏற்கனவே விநியோகஸ்தர்களிடமிருந்து பணங்களை பெற்று விட்டதாகவும், அவர்கள் நம்மளை நம்பி தான் இருக்கிறார்கள். எந்த காரணத்தைக் கொண்டும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் மட்டும் தான் வெளியிடுவோம் என்று தெரிவித்து விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் நிறைய வினியோகஸ்தர்கள் வட்டிக்கு வாங்கி தான் இந்த படத்தை நம்பி உள்ளனர். அதனால் தளபதியும் வேண்டாம் என்று கூறி விட்டாராம் OTT பிளாட்பார்மில் வெளியிடுவதற்காக பல கோடிகள் தருவதாக போட்டி போட்டுள்ளனர்.

ஆனால், எந்த ஒரு சூழ்நிலையையும் இது நடக்காது என்று தயாரிப்பாளர் லலித்குமார் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். நானும் விஜய்யும் இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் அதனால் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

எவ்வளவு வட்டிக்கு வாங்கியிருந்தாலும் வினியோகஸ்தர்களுக்கு கண்டிப்பாக மாஸ்டர் படத்தால் பல மடங்கு லாபம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் படம் வரும் பொங்கல் அல்லது தீபாவளிக்கு என்றும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.