முன்னணி நடிகர்களிடம் மல்லுக்கட்டும் சன் பிக்சர்ஸ்.. முடியவே முடியாது என முட்டுக்கட்டை போடும் தளபதி

கொரானா பாதிப்பால் சினிமாவைச் சேர்ந்த பல தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடன் வாங்கி படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய தயாரிப்பாளர் என்றால் அது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். அந்த வகையில் கிட்டத்தட்ட 9 படங்களுக்கான வேலைகளை ஒரே நேரத்தில் தயார் செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் அடுத்து பெரிய படங்களாக எதிர்பார்க்கப்படும் அண்ணாத்த மற்றும் தளபதி 65 படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடையில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு மற்றும் படக்குழுவினர் சார்ந்த வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நஷ்டத்தை சந்தித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இது பெரிய அடி இல்லை என்றாலும் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது. தற்போது தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் கிட்டத்தட்ட நூறு கோடிகள் வரை சம்பளம் பேசி உள்ளார்களாம்.

இதனால் தங்களுடைய சம்பளத்தில் கணிசமான அளவு குறைத்துக் கொள்வீர்களா என அவர்களிடம் தங்களுடைய நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்களை அனுப்பி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்தியாவிலேயே நம்பர் ஒன் சேனலாக இருக்கும் சன் டிவியை சேர்ந்தவர்கள் இந்த சின்ன பிரச்சனைக்கெல்லாம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டு தங்களுடைய மதிப்பைக் கெடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்