மாஸ்டர் வந்தவுடன் லோகேஷ் கனகராஜ்க்கு வரபோகும் சவால்கள்.. உஷாரா இருக்க சொன்ன விஜய்

தியேட்டர்காரர்கள் முதல் சினிமாக்காரர்கள் வரை இது பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை தான். கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல பரிச்சயமான முகங்கள் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளனர். அதில் ஒருவர்தான் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனு. தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து ஒரு பிரேக் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம்?

மாஸ்டர் படத்தின் கதையை எப்படி லோகேஷ் கனகராஜ் யோசித்தார் என்பதை என்னால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு முக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒன்று சொதப்பினாலும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும் என கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி கூட நடித்தது?

விஜய் சேதுபதிக்கும் எனக்கும் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இல்லை. இருந்தாலும் தான் விரும்பும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

விஜய்யின் தீவிர ரசிகர் நீங்க , அவரோட ஒர்க் பண்றது எப்படி இருந்தது?

விஜய் அண்ணா ஓட தீவிர ரசிகன் என்று சொல்ல நான் ரொம்ப பெருமைப்படுவேன். எவ்வளவு பெரிய நடிகர், ஆனா செட்டில சாதாரண மனிதனைப் போல தான் நடந்து கொள்வார். பிரேக் சொல்லாமல் கேரவனுக்கு செல்ல மாட்டார். கண்ணாடி போட்டுக் கொண்டு அமர்ந்து ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என நோட் பண்ணிக் கொண்டே இருப்பார் எனவும் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் பத்தி ஏதாவது விஜய் சொன்னாரா?

மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருத்தரா மாறிவிடுவார். நீ வேணா பாரு என என்னிடம் விஜய் அண்ணா லோகேஷ் கனகராஜ் புகழ்ந்து கூறினார். மேலும் அதுக்கபுறம் அவர் படம் மற்றும் வரபோகும் பல வாய்ப்புகள் எப்படி சமாளிக்க போறதுதான் கஷ்டம் என்கிறாராம்.

மாஸ்டர்ல உங்க கேரக்டர்?

அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனா நான்தான் மாஸ்டர் படத்தின் கதையிலேயே முக்கிய கட்டத்தில் திருப்புமுனையாக இருப்பேன் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன் எனவும் மாஸ்டர் படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் சாந்தனு.

மாஸ்டர் எப்போ ரிலீஸ்?

மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனதில் தனக்கும் வருத்தம்தான். ஆனால் எப்போது வந்தாலும் இந்த கோழி பந்தயம் அடிக்கும். நாட்கள் செல்லச் செல்ல மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வெறித்தனமாக கொண்டாட வைத்து விடும் போல என ஜாலியாக பேசுகிறார் சாந்தனு.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்