இந்த மூணு பேருக்கும் ஒரு தூண்டில் போட்டு வைத்த த்ரிஷா.. சிக்குனா சிக்கட்டும் சிக்காட்டி போகட்டும்

தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எங்கேயுமே யாருக்குமே வேலை இல்லை. அதேபோல் சினிமா நடிகர்களுக்கும் சூட்டிங் எதுவும் இல்லாததால் அனைவரும் சமூக வலை தளங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடி வந்தார். மேலும் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி தனது பொழுதை கழித்து வந்தார்.

உங்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் என ரசிகர் ஒருவர் திரிஷாவிடம் கேட்டார். அதற்கு திரிஷா, இந்தியாவிலேயே தனக்கு வெறும் 3 நடிகர்கள் மட்டும் தான் பிடிக்கும் எனக் கூறினார்.

அவர்கள் வேறு யாருமில்லை. கமல்ஹாசன், மோகன்லால் மற்றும் அமீர் கான் ஆகியோர் ஆவர். தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு விடை அளித்து வந்த திரிஷா, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் குறும் படம் எப்போது வெளிவரும் என்று கேட்டதற்கு விரைவில் எடிட்டிங் பணிகள் முடிவடைந்து வெளிவரும் என கூறியுள்ளார்.

மேலும் உண்மை காதலை உணர்ந்து உள்ளீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, தற்போது வரை உண்மையான காதலை நான் சந்திக்கவில்லை எனவும், விரைவில் சந்திப்பேன் எனவும் உறுதி கூறியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்