தளபதி பாடிய பாட்டை சூப்பர் என்ற நடிகை.. ஒரு வருஷமா கோமாவில் இருந்தியாமா என கலாய்த்த விஜய்

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் வெளியீட்டு தேதியில் பல குளறுபடிகள் நிலவிக் கொண்டு இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்களிலும் மாஸ்டர் படத்தை வெளியிடப்போவதாக பல அதிகாரபூர்வமற்ற செய்திகள் தொடர்ந்து பரவிக் கொண்டே உள்ளன.

ஆனால் திட்டமிட்டபடி படம் தியேட்டர்களில் மட்டும் தான் வெளியாகும் என மாஸ்டர் படக்குழுவினர் வதந்தி பரப்பியவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, விஜய்யின் ரசிகர் சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர்.

அவர்களுடன் சேர்ந்து முதன்முறையாக தளபதி விஜய்யுடன் நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. அவர் மாஸ்டர் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்றைக் கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதாவது ஒரு முறை விஜய் மற்றும் ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது, காட்சி இல்லாத நேரத்தில் தளபதி விஜய்யிடம், நீங்க நல்லா பாடி இருக்கீங்க! என கூறினாராம் ஆண்ட்ரியா.

எந்த பாட்டுமா கண்ணு? என விஜய் கேட்க, வெறித்தனம் பாடல் தான் என ஆண்ட்ரியா கூற ஷாக் ஆகி விட்டாராம் தளபதி விஜய். ஏம்மா இப்பதான் அந்த பாட்டை கேக்குறீங்களா, நீங்க தமிழ்நாட்டில் தானே இருக்கீங்க? என அதிர்ச்சி அடைந்து கேட்டாராம் தளபதி விஜய்.

அதுமட்டுமில்லாமல் நாம் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் ஆச்சும் நியாபகம் இருக்கிறதா என ஆண்ட்ரியாவிடம் தளபதி விஜய் கேட்டதாக சமீபத்திய நேரலையில் ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலை தான் இருவரும் இணைந்து பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யின் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் எனவும் ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்