உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்…

உலகத் தமிழினத்தின் ஆறாப்பெருந்துயராய் அமைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11வது ஆண்டினை நினைவேந்தும் வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகப்பரப்பெங்கும் நேரடி பொதுநிகழ்வுகளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில், நவீன தொழில்நுட்பம் தந்துள்ள வாய்ப்புக்களை ஒரு களமாக பாவித்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டங்களை ஒருங்கு செய்துள்ளோம்.தமிழகம், புலம்பெயர் நாடுகள், மலேசியா, தென்னாபிரிக்கா என நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், அமைப்பு பிரதிநிதிகள் என்று உலகப் பரப்பெங்கும் இருந்து 30க்கும் மேற்பட்டபிரமுகர் பங்கெடுக்கின்றனர்.

இவ்விரு நிகழ்வுகளும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பாகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்