சிவகார்த்திகேயனால் நடுத்தெருவுக்கு வரும் தயாரிப்பாளர்கள்.. மாட்டி கொண்டு படாத பாடுபடும் நிறுவனம்

தமிழ்சினிமாவில் பலரையும் பொறாமைக்கு உள்ளாக்கிய நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமான நாயகியாக வலம் வருகிறார். எப்போதுமே ஒரு சிலர் உயரத்துக்கு வந்துவிட்டால் தன்னுடைய சுய ரூபத்தைக் காட்டுவார்கள் தானே. அதற்கு சிவகார்த்திகேயன் மட்டும் விதிவிலக்கா என்ன.

தன்னை நம்பி காசு போட தயாரிப்பாளரை ஊரை விட்டே துரத்திய பெருமை அவருக்கு உண்டு என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். சிவகார்த்திகேயன் வளர்ச்சியில் எந்த அளவுக்கு விஜய் டிவியின் பங்கு இருக்கிறதோ அதே அளவுக்கு அவரை வைத்து தொடர்ந்து படம் தயாரித்த 24am ஸ்டுடியோஸ் ஆர் டி ராஜாவுக்கு அதிக பங்கு உண்டு.

சிவகார்த்திகேயனை பெரிய அளவில் வளர்த்து விட்டு நாமும் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளராக அறிமுகமானார். சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக்க வேண்டும் என எண்ணி முதல் படத்திலேயே பெரிய அளவு செலவு செய்தார். அதற்கான பலன் சுத்தமாக கிடைக்கவில்லை.

ரெமோ படம் தமிழ்நாட்டில் வசூல் செய்த அளவுக்கு மற்ற மாநிலங்களில் படு தோல்வியடைந்தது. இங்க சம்பாதித்ததை அங்க கடன் கட்டி விட்டார் பாவம். சரி, விட்டதை பிடிக்கலாம் என தொடர்ந்து பெரும் பொருட்செலவில் வேலைக்காரன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை எடுத்தார். இந்த படங்களின் நிலைமையைப் பற்றி அனைவரும் அறிந்ததே.

தோல்வி அடைந்த படங்களினால் கடன் சுமை அதிகமாகி ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்தின் படப்பிடிப்பை கூட பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தன்னை நம்பி பணம் போட்டவருக்கு நல்லது செய்ய வேண்டும் தானே. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்ததால் ஆர் டி ராஜாவை ஒதுக்கி விட்டாராம் சிவகார்த்திகேயன்.

ஊருபக்கம் பொட்டிகட்டி போனவர் தற்போது ஒரு வழியாக எப்படியோ அயலான் படத்தை தொடங்கி விட்டார். இன்னும் அது முடிவதற்குள் என்னென்ன பஞ்சாயத்து நடக்குமோ என அச்சத்தில் உள்ளாராம். அவரது வழியில் தானாக வந்து தலையைக் கொடுத்து மாட்டிக் கொண்டவர் தான் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர்.

சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் தயாரிக்க நினைத்து அக்ரிமெண்ட் போட்டுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் சமர்த்துப் பிள்ளையாக இருந்த சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் தோல்விக்கு பிறகு தன்னுடைய வேலைதனத்தைக் காட்டி விட்டாராம்.

ஹீரோ படத்தின் தோல்வியால் தொடர்ந்து மேலும் இரண்டு படங்கள் தனக்கு பண்ணி கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. பத்தாததுக்கு குறைந்த பட்ஜெட்டில் பெரிய அளவு வசூல் செய்யும் கதையை தன்னுடைய எஸ் கே புரொடக்ஷன்ஸ் சார்பிலும், பெரிய பட்ஜெட் படங்களை மற்ற நிறுவனத்தின் மீதும் திணித்து விடுகிறாராம்.

டாக்டர் படம் ஹிட்டாகி விடும் என நம்பியதால் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் தன்னுடைய நிறுவனத்தையும் இணைத்துக் கொண்டார் சிவகார்த்திகேயன். ஹீரோ படத்தால் பெரும் கடனுக்கு உள்ளான கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

தானாய் வந்தவன் தலையில் மிளகாய் அரைப்பதை இது ஒன்றும் புதிது இல்லை சிவகார்த்திகேயனுக்கு என்கிறது சினிமா வட்டாரம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனல் மூலம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.