அதே படம்.. அதே சிம்புவா?.. எனக்கு மோட்சமே கிடைக்காத என குழப்பத்தில் கவுதம் மேனன்

சிம்பு த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. அப்போதெல்லாம் கவுதம் மேனன் தொட்டதெல்லாம் தங்கமாக மாறிய காலம்.

அவ்வளவு அற்புதமாக செதுக்கி இருந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றி சிம்புவை வேறொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ளதான் தவறிவிட்டார்.

சமீபகாலமாக சிம்புவின் நடவடிக்கைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. மாநாடு படப்பிடிப்பில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். இதுவரையில் மாநாடு படப்பிடிப்பிலிருந்து சிம்புவை பற்றிய எந்த ஒரு நெகட்டிவ் செய்திகளும் வெளிவரவில்லை.

இந்நிலையில் சிம்பு மற்றும் திரிசாவின் வைத்து இந்த ஊரடங்கு நிகழ்வின்போது ‘கார்த்தி டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார் கவுதம் மேனன். திரிஷா பேசுவதைப் போல் வெளியான டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே ஷூட்டிங் செய்ய தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்த கவுதம் மேனன் படத்தின் டயலாக்குகளை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார். அந்த வசனங்கள் சிம்புவை பெரிதும் பாதித்ததால் உடனடியாக கௌதம் மேனனுக்கு போன் பண்ணி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகத்தை உருவாக்குமாறு கேட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் எப்போது அந்த படம் ரெடியானாலும் நடிக்க தயார் என சிம்பு கூறியதை அடுத்து கௌதம் மேனன் அடுத்த கட்ட வேலைகளில் இறங்கிவிட்டாராம். விரைவில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படம் வெளியாக உள்ளது.

வரணும்… பழைய சிம்புவாய் திரும்ப வரணும்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்