உலகம் முழுவதும் 47 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

உலகின் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி, பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் 15 இலட்சத்தைக் கடந்துள்ளனர்.

அத்துடன், இந்த வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் மரணித்துவரும் நிலையில் மொத்த உயிரிழப்பு 3 இலட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதன்படி நேற்று ஒரேநாளில் 96 ஆயிரத்து 500 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 47 இலட்சத்து 21 ஆயிரத்து 851ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 360 பேர் உலக நாடுகளில் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 3 இலட்சத்து 13 ஆயிரத்து 260ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 47 இலட்சம் பேரில் 18 இலட்சத்து 12 ஆயிரத்து 164 பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றால் பெரும் மனித இழப்பைச் சந்தித்துள்ள அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 218 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 90 ஆயிரத்து 113ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று மட்டும் அந்நாட்டில் 23 ஆயிரத்து 488 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் மொத்த பாதிப்பு 15 இலட்சத்து 7 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் தற்போது வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அங்கு நேற்று ஓரேநாளில் மட்டும் 816 பேர் மரணித்துள்ளனர். இந்நிலையில் மொத்த மரணங்கள் 15 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அந்நாட்டில் 14 அயிரத்து 919 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2 இலட்சத்து 33 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் நேற்று 20 ஆயிரத்து 223 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 190 பேர் மரணித்துள்ளனர்.

அந்நாடுகளில் மொத்தமாக 17 இலட்சத்து 61 ஆயிரத்து 352 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது வைரஸ் தாக்கம் குறைந்துவருகின்ற நிலையில் பிரித்தானியாவில் மட்டும் சற்று மரணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இதேவேளை, ஆசியாவில் மொத்தமாக 7 இலட்சத்து 78 ஆயிரத்து 81 பேருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த மரணங்கள் 24 ஆயிரத்து 302 ஆகக் காணப்படுகின்றமை பதிவாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.