ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 24 மணித்தியாலத்தில் 271பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 13பேர் உயிரிழந்தனர்.

மேலும், 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் ஒட்டுமொத்தமாக 183,765பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 8,618பேர் உயிரிழந்துள்ளனர்.

9,247பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 165,900பேர் குணமடைந்துள்ளனர். 677பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

தற்போது ஜேர்மனி கொரோனா வைரஸ் பரவலின் முதல் கட்டத்தைக் கடந்துவிட்டாலும், தொடர்ந்து சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.