மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி

மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை என ஜோர்ஜ் பிலோய்ட்’டின் காதலி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் பிடிக்கு இலக்காகி உயிரிழந்த ஜோர்ஜ் பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்க நகரங்களில் நடைபெறும் போராட்டங்கள் ஐந்து நாட்களையும் கடந்து நடைபெறுகிறது.

அமெரிக்காவின் மின்னெசொட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரான மினியாபொலிஸில், அண்மையில் கைதான கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிலோய்ட், பொலிஸாரின் வலுக்கட்டாயமான பிடிக்குள் சிக்கி உயிரிழந்தார்.

இது குறித்து வெளிவந்துள்ள காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், உலகெங்கும் நீதிக்கான குரல்கள் வலுவடைய செய்துள்ளன.

இந்நிலையில் ஜோர்ஜ் பிலோய்ட்’டின் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்காவின் நகரங்கள் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.

அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் பல பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோர்ஜ் பிலோய்ட் மரணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவரது காதலி, குறித்த மரணத்துக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,  ஜோர்ஜ் பிலோய்ட் ஓர் மிக சிறந்த தந்தை. அவர் மூன்று பொலிசாரின் பாரத்தினை தலைமேல் தாங்கி, தெருவோரத்தில் தலை பதித்து இறப்பதற்கானவர் அல்லர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற காரணமான குறித்த மரணத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது அவரது மகளான ஜியானாவுக்கு தந்தை இல்லை. அவர் அவளது மகளின் வளர்ச்சியை பார்க்கப்போவதில்லை. அவளது கல்வி பட்டமளிப்பு எதிலும் அவர் பங்கெடுக்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜ் பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதிகோரி கடந்த ஆறு நாட்களாக  போராட்டம் நடைற்று வரும் நிலையில், இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் முறுகல் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டம் காரணமாக நேற்றைய தினம் ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.