அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை – பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்

அடுத்த வார ஆரம்பத்தில் நாட்டை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முகமாக கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.

இது குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த இரண்டு மாதங்களாக நடைமுறையில் இருந்த பெரும்பாலான வணிகங்களை மூடுவது மற்றும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படியான கடுமையான இறுக்கங்களுடன் கூடிய நான்காம் நிலை ஊரடங்கு அடுத்த வாரமளவில் முதல்நிலைக்கு கொண்டுவரப்படும் என கூறினார்.

மேலும் மதுபான நிலையங்கள் மற்றும் சமூகக் கூட்டங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது போன்ற சமீபத்திய மாற்றங்கள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்புக்கு வழிவகுத்ததா என்பதை ஆராயுமாறும் கூறினார். அவ்வாறு இல்லையென்றால் அடுத்த வாரமளவில் நல்ல நிலையில் இருப்போம் என்றும் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் முதலாம் நிலையின் கீழ், மதுபானக் கடைகள், இரவு விடுதிகள், தேவாலயங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையில் சமூக தூரத்தையோ அல்லது வரம்புகளையோ கடைபிடிக்க தேவையில்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், கடந்த தினங்களை விட கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஒரு பெரிய மாற்றம் இருந்தாலும் நியூசிலாந்தின் எல்லையை மீண்டும் திறக்க திட்டங்கள் வகுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.