ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவரும் நிலையில் ஐரோப்பாவிலும் பல மனித உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து 82 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய்களுக்கான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் ஜேர்மனியில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்