கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட வெனிசுலா அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணக்கம்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நிதியை பெற்றுக்கொள்ள வெனிசுவேலா அரசாங்கம், எதிர்க்கட்சி தலைமையிலான தேசிய சட்டமன்றத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியக் குழுவுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சுகாதார அமைச்சர் கார்லோஸ் ஆல்வரோடோ மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய சட்டமன்ற ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்கும் டொக்டர் ஜூலியோ கஸ்ட்ரோ மற்றும் பன் அமெரிக்கன் ஹெல்த் அமைப்பிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது என அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த நடைமுறை ஒரு நல்ல செய்தி மற்றும் நல்ல தொடக்கமாகும் என்றும் இதனால் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்திற்கு ஒன்றாக இணைந்து செயற்பட முடியும் என்றும் அமைச்சர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெனிசுவேலாவில் 1,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை