பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19: ஒரேநாளில் 31,890பேருக்கு வைரஸ் தொற்று!
பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 31,890பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரேஸிலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச பாதிப்பின் எண்ணிக்கை இதுவாகும்.
முன்னதாக, கடந்த மே மாதம் 30ஆம் திகதி 30,102பேர் பாதிக்கப்பட்டிருந்ததே, ஒருநாள் பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட முதல் நாடான அமெரிக்காவின், கடந்த 24 மணித்தியால பாதிப்பின் எண்ணிக்கையை விட இது அதிகம். அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 22,268பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதுதவிர, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேஸிலில், ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கையும் பதிவாகியுள்ளது.
இதன்படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 1,269பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்னதாக ஜூன் 3ஆம் திகதி 1,269பேர் உயிரிழந்ததே ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
பிரேஸிலில் ஒட்டுமொத்தமாக 615,870பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 34,039பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 306,834பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 274,997பேர் பூரண குணமடைந்துள்ளனர். 8,318பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை