இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ்: அமர்வுகள் தற்காலிகமாக இரத்து

இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினொருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

44 வயதான அபோ ஷாஹாதே என்பவருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்றம் (நெசெட்) இந்த அறிவிப்பினை வெளியிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்கள், ஊழியர்கள் வரவேண்டும். மற்றவர்கள் வீடுகளில் இருந்தபடியே பணிகளை கவனிக்கலாம்’ என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 10 நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற அனைத்து பகுதிகளிலும் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்ததாக அபோ ஷாஹாதே தெரிவித்துள்ளார். இதற்கமைய அவர்களை அடையாளங் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சில பாடசாலைகள் புதிய வைரஸ் தொற்றுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மூடப்பட்டன.

புதிய வைரஸ் தொற்றுகளின் பின்னடைவைக் கண்ட இஸ்ரேல் சமீபத்திய வாரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இஸ்ரேலில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 17 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 290இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.