அரிய நிகழ்வான “பெனும்பிரல் சந்திர கிரகணம்” இன்று!

மிகவும் அரிதான பெனும்பிரல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திரக்கிரகணம் இன்று ஆரம்பமாகி நாளைய தினம் 12.54 அதிகபட்ச கிரகணத்தை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6ஆம் திகதி 2.45 மணியளவில் இந்த கிரகணம் நிறைவடையவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஆசியா, அவுஸ்ரேலியா, ஐரோப்பா அல்லது ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் தெளிவாக பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெனும்பிரல் சந்திரக்கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை சரியான நேர்கோட்டில் அமையாமல் இருக்கும்போது இந்த கிரகணம் நிகழும்.

பூமியானது தனது வெளிப்புற நிழலின் மூலம் சூரியனின் ஒளி நேரடியாக சந்திரனை சென்றடைவதை தடுக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த வருடத்தில் மேலும் இரண்டு சந்திரக்கிரகணங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவியலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்