இனவெறிக்கு எதிரான போராட்டம்: சொந்தக் கட்சியிலேயே ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிர்ப்பு

அமெரிக்கா முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் இனவெறிக்கு எதிரான போராட்டங்களை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையாளும் விதம் சொந்தக் கட்சிக்குள்ளேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் உட்துறை செயலாளர் காலின் பாவெல், டொனால்ட் ட்ரம்ப்பின் போக்கு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை அழைப்பேன் என கூறியது தவறானது. நம்மிடம் அரசியலமைப்பு சட்டம் உள்ளது. அதை நாம் பின்பற்ற வேண்டும். ஆனால், ட்ரம்ப் அதில் இருந்து திசை மாறிச்செல்கிறார்’ என கூறினார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், காலின் பாவெலும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுக்கு தான் வாக்களிக்கப்போவதாகக் காலின் பாவெல் தெரிவித்துள்ளார்.

83 வயதான காலின் பாவெல், அமெரிக்க இராணுவத்தில் முன்னணி பொறுப்பிலிருந்து பின்னர் குடியரசு கட்சியில் இணைந்தவர் ஆவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.