உலகளவில் கொவிட்-19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.5 மில்லியனை கடந்தது!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7.5 மில்லியனை கடந்துள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 75 இலட்சத்து 97 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொடிய கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 4 இலட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, வைரஸ் தொற்றிலிருந்து 38 இலட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அங்கு இதுவரை வைரஸ் தொற்றினால் 2 இலட்சத்து 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 1 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக முறையே பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்