விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | யோர்க் பல்கலைக்கழகம் மார்க்கம்…

பொது நிதி உதிவியின் கீழ் யோர்க் பிராந்தியத்தில் அமையவிருக்கும் முதலாவது பல்கலைக்கழகமான யோர்க் பல்கலைக் கழகத்தின் மார்க்கம் மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்கான (Markham Centre Campus) திட்டத்தை ஆதரப்பதில் ஒன்ராறியோ அரசு பெருமை கொள்கிறது. யோர்க் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் உயர்பளளிக் கல்விக்குப் பின்னரான கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் இப்புதிய மார்க்கம் பல்கலைக்கழக வளாகம் இயங்குவதற்கு வேண்டிய நிதியை அரசாங்கம் வழங்கும்.

எமது மானிலத்தின் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஒன்ராறியோவின் பொருளாதாரத்துக்கு அடிப்படையான பங்களிப்பை வழங்குவதுடன், ஒன்ராறியோவின் பொருளாதார மீட்சிக்கும் முக்கிய பங்காற்றக்கூடியன. தற்சார்பு நிதியுதவியுடன் கூடிய பல்கலைக்கழக வளாக விரிவாக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், சுயமாகவும் பொறுப்புடனும் அவை செயற்படுவதை நாம் ஊக்குவிக்கும் அதேவேளை, எம் மாணவர்களுக்கான தெரிவுகளையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதோடு, மக்கள் வரிப்பணத்தையும் பாதுகாக்கின்றோம்.
முந்தைய அரசாங்கங்கள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுக்கான விரிவாக்கங்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பல மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள நிலையில், எமது அரசாங்காம் புதிய மூலதன செலவுகள் அற்ற புதிய வளாகங்களை ஊக்குவிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

புதிய மார்க்கம் பல்கலைக்கழக மத்திய வளாகம் பொறுப்புடைய விதத்தில் விரிவாக்கம் செய்யப்படும் ஒரு மாதிரி அமைப்பாகும். காரணம், இதற்கான மூலதன நிதி, யோர்க் பல்கலைக்கழகத்தால் அதன் சொந்த முதலீடு, அதன் நிதி திரட்டல்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் பெறப்படுபவற்றிலிருந்து வழங்கப்படும்.

2023ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் யோர்க் பல்கலைக்கழகத்தின் புதிய மார்க்கம் பல்கலைக்கழக மத்திய வளாகமானது, யோர்க் பிராந்திய மாணவர்களுக்கு தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில்முனைவோர் கல்வி போன்ற உயர் தேவைகள் உள்ள துறைகளில் பட்டப்படிப்புக்கான தெரிவுகளை வழங்கும். இப்புதிய பல்கலைக்கழக வளாகம், மாணவர்கள் கல்வி கற்ற பின்னரான பணியிடச் சூழலுக்கு அவர்களைத் தாயார்படுத்தும் வகையில், அவர்கள் துறைசார் தொழிலகங்களில் கல்வி கற்கும்போதே கற்றலுடன் இணைந்த கள அனுபவத்தினையும் வழங்கவுள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.