10 ஆயிரம் இலங்கையர் வேலை இழப்பு; நிர்க்கதியானோரை அழைத்துவர முடிவு…

மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கையர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட முடக்க நிலையை அடுத்து, பல்வேறு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களது தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதியான நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

இலங்கைக்கு வருவதற்காக சுமார் 40 ஆயிரம் இலங்கைத் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களை இலங்கைக்கு அழைத்து வரத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முடிவு செய்துள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.