க்ரீன் இந்தியா சேலஞ்ச் – விஜய் அசத்தில்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது, க்ரீன் இந்தியா சேலஞ்ச் அடிப்படையில் தனது வீட்டில் செடிகளை நட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன்பின் அவர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஜூனியர் என்டிஆர், விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர்களுக்கு விடுத்தார் என்ற செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தளபதி விஜய் தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவரே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது சமூக வலைத்தளத்தில் விஜய் இதுகுறித்து கூறியபோது, ‘இது உங்களுக்காக மகேஷ்பாபு அவர்களே. க்ரீன் இந்தியாவை உருவாக்குவது அனைவருக்கும் நல்லது, நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவது என்பதுடன், மகேஷ்பாபுவின் சேலஞ்சை நிறைவேற்றிய விஜய்யை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்