அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளரான ஆசிய பெண்

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், செனட் உறுப்பினரான ஆசிய – அமெரிக்க பெண்ணான கமிலா ஹரிஸை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளார்.

இந்திய – ஜமைக்கா பாரம்பரியத்தின் கலிபோர்னியா செனட்டராக கமிலா ஹரிஸ் நீண்ட காலமாக பணியாற்றி வந்துள்ளார்.

கலிபோர்னியாவின் முன்னாள் சட்டமா அதிபராக பதவி வகித்த அவர் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் பொலிஸ் சீர்திருத்தத்தையும் வலியுறுத்தி வருகிறார். ஜனநாயக கட்சியின் பிடன் நவம்பர் 3 ஆம் திகதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை எதிர்கொள்வார்.

இந்த நிலையில் டிரம்பின் துணை ஜனாதிபதி வேட்பாளரான் மைக் பென்ஸ் அக்டோபர் 7ஆம் திகதியன்று உட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமிலா ஹரிஸூடன் விவாதத்தில் ஈடுபடவுள்ளார்.

2008ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியால் சாரா பாலின் மற்றும் 1984 இல் ஜனநாயகக் கட்சியினரால் ஜெரால்டின் ஃபெராரோ ஆகிய இரண்டு பெண்கள் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்டனர்.  எனினும் அந்த இருவரும் வெள்ளை மாளிகையில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.