ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ‘தடுப்பு மையங்களில் அலைப்பேசிகளுக்கு தடைவிதிக்கும் மசோதா’: வலுக்கும் எதிர்ப்பு?

ஆஸ்திரேலிய குடியேற்றத் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து அலைப்பேசிகளை பறிமுதல் செய்வது தொடர்பான மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தினால் கருத்தில் கொள்ளப்பட இருக்கிறது.

புலம்பெயர்வு சட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய இம்மாற்றம், குடியேற்றத் தடுப்பு முகாம்களில் அலைப்பேசிகளையும் சிம் கார்டுகளையும் தடை செய்வதற்கான அதிகாரத்தை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் குடியேற்றத்துறை அமைச்சர் அலன் ட்ஜ்க்கும் வழங்குகிறது. அத்துடன் தடுப்பில் உள்ளவர்களை பரிசோதிக்க இம்மாற்றம் மேலும பல அதிகாரங்களை ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகளுக்கு வழங்குகின்றது.

கொரோனா பெருந்தொற்று சூழலினால், தடுப்பு முகாம்களுக்கு பார்வையாளர்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ‘அலைப்பேசிகள்’ என்பது உயிரைக் காக்கக்கூடியதாக இருக்கிறது என அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் இம்மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டஜ்,  தடுப்பு முகாம்களில் போதைப் பொருட்கள் மற்றும் தடைச்செய்யப்பட்ட பொருட்களின் பரவலைத் தடுக்க அலைப்பேசிகளை தடைச்செய்ய தனக்கும் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் இம்மசோதா அதிகாரமளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இத்தடை தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கும் பொருந்தும் என அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர், ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம், ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம், ஆம்னெஸ்டி  இண்டர்நேசனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கவலைத் தெரிவித்திருந்தன.

ஆஸ்திரேலிய செண்ட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் கமிட்டிக்கு இம்மசோதாவை ஆராய்ந்தது தொடர்பாக சமர்பித்துள்ள அறிக்கையில், தடுப்பில் உள்ள அகதிகளுக்கு அடிப்படைத் தேவைகளான தண்ணீர், உணவைப் போல அலைப்பேசிகளும் உயிர் காக்கக் கூடியவை.

தடுப்பில் உள்ளவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளக்கூடிய ஆபத்திலும் தங்களை அதிகம் வருத்திக்கொள்ளக்கூடிய ஆபத்திலும் உள்ளவர்கள் என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் குறிப்பிடுகிறது.

“தடுப்பில் உள்ளவர்களிடையே விரக்தி உணர்வுகளை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கையை எச்சரிக்கையுடன் முழுமையாக ஆராய வேண்டும்,” என செண்ட்டிற்கு சமர்பித்துள்ள அறிக்கையில்

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்திருந்தது.

இம்மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு முன்பு வந்துள்ள நிலையில், முன்மொழியப்பட்டுள்ள மாற்றத்திற்கு எதிரான பரப்புரையை அகதிகள் நல வழக்கறிஞர்கள் தொடங்கியிருக்கின்றனர். இம்மசோதாவை நிராகரிக்கக்கோரும தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் மனுவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

“தடுப்பில் உள்ள மக்களுக்கு அலைப்பேசிகள் என்பது உயிர் காக்கக்கூடியவை. தங்கள் வழக்கறிஞர்களை, மருத்துவர்களை அதன் வழியாகவே தொடர்புக் கொள்வார்கள். முக்கியமாக அவரவர் குடும்பத்துடன், நண்பர்களுடன், சமூகத்தில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருக்க அலைப்பேசிகள் அவசியமானவை,” எனத் தெரிவித்துள்ளார் தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் நினா பீல்ட்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.