தீக்குளித்து உயிரிழந்த ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிக்கு மனநலச் சிக்கல்: விசாரணையில் அம்பலம்?

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதி தீக்குளிப்பதற்கு முன்பு உளவியல் ஆலோசகரை சந்திக்க எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவரது கோரிக்கை தீக்குளிக்கும் நாள் வரை பரிசீலீக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Omid Masoumali எனும் 24வயது அகதி, நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் பார்வையிட வந்த ஐ.நா. அதிகாரிகளின் முன்னிலையில் தீக்குளித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

57 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இவர் முதலில் நவுருத்தீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார். பின்பு 31 மணிநேரம் கழித்து உறுப்பு செயலிழப்பால் உயிரிழந்தார்.

தற்போது, இவரது மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தேதியிடாத குறிப்பில் உயிரிழந்த இந்த அகதி உளவியல் ஆலோசகரை சந்திக்கக் கோரியமை தெரிய வந்துள்ளது.

சர்வதேச சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளில்(International Health and Medical Services (IHMS)) பணியாற்றி வந்த Catherine Cleary, இந்த அகதி “தான் மோசமாக உணர்கிறேன்” அல்லது “உதவி தேவை” என்றோ எழுதியிருந்தால் அவரது நலனை பரிசோதிக்க IHMS ஊழியர்கள் உடனடியாக தொடர்புக் கொண்டிருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

தற்போது நடந்த விசாரணயில் உயிரிழந்த அகதிக்கு மன அழுத்தம், கவலை, தற்கொலை எண்ணம் உள்ளிட்டவை ஏற்கனவே இருந்தமை தெரிய வந்துள்ளது. அதே சமயம், இவரது முந்தைய மனநலச் சிக்கல்கள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என Cleary தெரிவித்திருக்கிறார்.

நீதிமன்றத்துக்கு வெளியே அகதி ஆதரவாளர்களின் போராட்டத்துக்கு இடையில் நடைபெற்ற இந்த விசாரணையில், உயிரிழப்புக்கு ஆளான அகதியின் மனநல நிலையையும் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.