முக அழகினைக் கூட்டும் உருளைக் கிழங்கு – பேஸ் பேக்

முக அழகினைக் கூட்டும் வகையில் பலவகையான மாஸ்க்குகளை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முக அழகினைக் கூட்டும் வகையிலான உருளைக் கிழங்கு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

உருளைக்கிழங்கு- 3

பால்- 2 ஸ்பூன்

ஓட்ஸ்- 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை :

1. உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். ஓட்ஸினை பொடித்துக் கொள்ளவும்.

2. அடுத்து இதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.

3. 30 நிமிடங்கள் இதனை ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இந்த மாஸ்க்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்தநீரால் கழுவவும். முக அழகானது கூடும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்