எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸில் பெருநிறுவனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு…

எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸ் மக்கள் நாடளாவிய ரீதியில் *“Konzernverantwortungsinitiative -பெருநிறுவனங்களின் பொறுப்புக்கூறல்”* சட்ட அமுலாக்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு வாக்கழிக்கவுள்ளனர்.

சுவிஸை தளமாகக் கொண்டியங்கும் *பெருநிறுவனங்கல்* வெளிநாடுகளில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களிற்கும், சுற்றுச் சூழல் மாசுபடுத்தல்களிற்கும் சேதப்படுத்தல்களிற்கும் சுவிஸின் நீதிமன்றங்கள் ஊடாக நீதியை பெறுவதற்கு இன்றுவரை சட்டங்கள் எதுவும் இல்லை.

*உதாரணத்திற்கு:*
சிறீலங்கா அரசை அனைத்துலக சமூகமும், ஐ. நா மனித உரிமைகள் சபையும் மனித உரிமைகள் மீறல்கள், இனவழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக குற்றம் சுமத்தியுள்ள நிலையிலும் சுவிசை தளமாக கொண்டியங்கும் Holcim நிறுவனம் சிறீலங்காவின் பயங்கரவாத இராணுவத்துடன் வர்த்தக உறவுகளை மேற்கொள்வதுடன் கூட்டிணைந்தும் தொழிற்படுகின்றது.

இவ் அவலத்தை இன்று இருக்கும் சட்டங்கள் ஊடாக நாம் நீதிக்கும் முன் நிறுத்த முடியாது.

எதிர்வரும் வாக்கெடுப்பில் *JA* என்று வாக்களிப்பதன் ஊடாக நாம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் மற்றும் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி சேதப்படுத்தும் சுவிஸின் பெருநிறுவனங்களை சுவிஸின் *நீதிமன்றங்கள்* முன் நிறுத்தலாம். உலகலாவிய நிறுவனங்கள் ரீதியான அவலங்களை தடுத்து நிறுத்தலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.