ஒருநாளைக்கு எத்தனை வேகவைத்த முட்டை சாப்பிடுவது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும் தெரியுமா?

புரதம் மற்றும் ஆற்றல் அதிகமிக்க முட்டை ஒரு காலை உணவை நிரப்புவதற்கு ஒரு ஆரோக்கியமான விருப்பமாகும். முட்டைகளை மற்ற வழிகளில் எடுப்பதைக் காட்டிலும் வேகவைத்து சாப்பிடுவது அதன் ஆரோக்கியப் பலன்களை முழுவதுமாக பெற உதவும்.

  முகப்பு ஆரோக்கியம் உலக நடப்புகள் அழகு..அழகு. உறவுகள் ஆன்மீகம் தாய்மை-குழந்தை நலன் சமையல் குறிப்புகள் ஃபேஷன் வீடு-தோட்டம் போல்ட் ஸ்கை » தமிழ் » உடல்நலம் » Diet fitness ஒருநாளைக்கு எத்தனை வேகவைத்த முட்டை சாப்பிடுவது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும் தெரியுமா? By Saran Raj Updated: Wednesday, November 4, 2020, 10:11 [IST] புரதம் மற்றும் ஆற்றல் அதிகமிக்க முட்டை ஒரு காலை உணவை நிரப்புவதற்கு ஒரு ஆரோக்கியமான விருப்பமாகும். முட்டைகளை மற்ற வழிகளில் எடுப்பதைக் காட்டிலும் வேகவைத்து சாப்பிடுவது அதன் ஆரோக்கியப் பலன்களை முழுவதுமாக பெற உதவும். மற்ற முட்டை வகைகளுடன் ஒப்பிடும்போது, வேகவைத்த முட்டைகளில் கலோரிகள் குறைவாகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். வேகவைத்த முட்டையை தினமும் உட்கொள்வது உங்கள் அன்றாட அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், எடையைக் குறைக்கவும் உதவும். வேகவைத்த முட்டை எப்படி எடையை குறைக்க உதவுகிறது என்பது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வேகவைத்த முட்டை டயட் என்றால் என்ன? வேகவைத்த முட்டை டயட் அடிப்படையில் ஒரு நாளில் பல முறை வேகவைத்த முட்டைகளை உண்ணும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. நீங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் இதை நீங்கள் சேர்க்க வேண்டியதில்லை, ஆனால் ஒரு முட்டையை சீரான இடைவெளியில் சாப்பிடுவது உங்கள் ஆற்றல் அளவை சீராக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தடுக்கும். வேகவைத்த முட்டை டயட் என்பது எடை இழப்பிற்கு வேகமான மற்றும் எளிதான வழி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி வேலை செய்கிறது? வேகவைத்த முட்டை உணவு கலோரி கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் நுகர்வு ஆகிய இரண்டு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. ஒரு முட்டையில் சுமார் 75 கலோரிகள், 5 கிராம் கொழுப்பு, 6 கிராம் புரதம் மற்றும் 1 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளன. இது உங்கள் கலோரிகளை ஆரோக்கியமான முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்களை நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்