சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்பு 22 நாட்களில்  நடித்து முடித்துவிட்டாராம்!

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தில் சிம்பு 22 நாட்களில்  நடித்து முடித்துவிட்டாராம்.

மேலும் டப்பிங் பேசி முடித்த கையோடு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சிம்புவின் அறிமுக காட்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. காலா படத்தில் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது போன்று அறிமுக காட்சி இருந்தது அல்லவா அதே போன்று தான் சிம்புவின் அறிமுக காட்சியாம்.

சிம்பு கிரிக்கெட் விளையாடுவது போன்று தான் அவரின் அறிமுக காட்சி இருக்குமாம். அந்த காட்சிக்கு மோஷன் போஸ்டரில் வந்த தீம் மியூசிக் இருக்குமாம். இந்நிலையில் தீபாவளி பரிசாக ஈஸ்வரன் படத்தின் டீஸர் வரும் 14ம் திகதி வெளியாகவிருக்கிறது. ஈஸ்வரன் செட்டில் இருந்து புதுப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

ஈஸ்வரன் படத்தில் நடிக்கத் துவங்கிய பிறகு சிம்பு சமூக வலைதளங்களில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். என்ட்ரி கொடுத்ததில் இருந்து தன் படங்கள் குறித்து அவ்வப்போது அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்