கோவிட் – 19 விரைவுப் பரிசோதனை & கொவிட்-19 நோய்த்தொற்றினை எதிர்கொள்வதற்கென மேலதிக மருத்துவ படுக்கைகள்…

கோவிட் – 19 விரைவுப் பரிசோதனை

கோவிட்-19 நோய்த்தொற்று அதிகமாய் பரவும் இடங்கள், கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் விரைவான பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விரைவுப் பரிசோதனை நடவடிக்கையானது மருத்துவத்துறையின் முன்னணிக் களப் பணியாளர்களைப் பாதுகாக்க உதவுதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள்,  அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அங்கு வருகை தருபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையிடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றோரையும் விரைவாக பரிசோதனை செய்ய உதவும். இப்புதிய நடைமுறை நோய்த்தொற்றினை உடனடியாக அடையாளம் காண்பதற்கும், நோய்த்தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதன்மூலம் நோய்த்தொற்றை அறிந்து கொள்வதற்கான பரிசோதனையை செய்துகொள்ள விரும்புவோர்க்கு அப்பரிசோதனையை செய்துகொள்வதற்கும், அதன் முடிவை உடனடியாக அறிந்து கொள்வதற்குமான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதை ஒன்ராறியோ மானில அரசு உறுதி செய்கிறது.

கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலுள்ள  உள்ள மருத்துவமனைகள், மதிப்பீட்டு மையங்கள் போன்றவற்றிலும், அதிக தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஏற்படும் திடீர் நோய்ப்பரம்பலுக்கும் வேண்டிய பரிசோதனைகளைச் செய்வதற்குமென முதற்கட்டமாக ஒன்ராறியோ 98,000 ID NOW ஐ பெற்றுள்ளது.

நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனையை செய்ய விரும்பும் ஒருவர் மேற்படி பரிசோதனையை செய்துகொள்வதற்கும், அதன் முடிவை உடனடியாக அறிந்துகொள்வதற்கும் ஆவன செய்யப்படும் என்பதை ஒன்ராறியோ அரசு  உறுதிப்படுத்துகிறது. தற்போது மானிலத்தில் நடைமுறையிலுள்ள பரிசோதனை வழிகாட்டல் விதிமுறைகளுக்குள் அடங்கும் எவரும் அரசினால் மருந்தகங்கள் மற்றும் பரிசோதனை மையங்களினூடாக வழங்கப்படும் சேவையினைத் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு கோவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் காணப்படின், நீங்கள் கோவிட்-19 பரிசோதனையை அதற்கான பிரத்தியேக பரிசோதனை மையங்ளிலேயே மேற்கொள்ளலாம்.

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்
ஸ்காபரோ – றூஜ் பார்க்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்