நடிகர் அஜித்துக்கு காயம் படப்பிடிப்பு ?

நடிகர் அஜித் என்ற பெயரே எப்போதும் மாஸ் தான். தற்போது போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில்  உருவாகி வருகிறது  “வலிமை” திரைப்படம். திரைப்படம் எப்போது வெளிவரும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது   அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஹியூமா குரேஷி நடிக்கிறார். வலிமை படத்தின் டீசர் ரசிகர்களால் வடிவமைக்கப்பட்டு வெளியாகியிருந்தது. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த டீசர் அனைவரையும் அசத்தியது.

கொரோனா காரணமாக நின்றுபோன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்