கனடா-அமெரிக்கா எல்லை ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை மூடப்படும்

கொரோனாத் தொற்றுப் பரவலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் அடங்கும். இந்நிலையில் கனடாவில் தற்போது கொரோனாத் தொற்றின் 2ஆவது அலை தீவிரமாகப் பரவிவருகின்றது.

அதன்படி ,தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இதன் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான எல்லை வருகிற ஜனவரி 21 ஆம் திகதி வரை மூடப்படுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)தெரிவித்துள்ளார்.

மேலும் ,முன்னதாக கொரோனாப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் கனடா-அமெரிக்கா இடையே எல்லை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்