உலகில் கொரோனா தொற்றாளர்கள் 7.83 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 78,305,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 55,075,748 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1,722,311 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது உலகில் 21,507,869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 106,045 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்