அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா- இது உங்களுக்குதான் …

நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் 400 மி லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும்.

எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உள்ள அனைவருக்குமே தோன்றும், இவ்வாறு தோன்றும் உணர்வுகள் இயல்பானது.

ஆனால், சிலருக்கு 400 மி.லி அளவை விட குறைவாக தேங்கி இருக்கும் போதே சிறுநீர் வருவது போன்ற உணர்வுகள் தோன்றும்.

ஓர் நாளுக்கு சராசரியாக 4 – 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால்,அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல்நலத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.

பொதுவான_காரணங்கள்.

👉நீரிழிவு,

👉சிறுநீர் பாதை தொற்று,

👉கர்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில்,

👉புரோஸ்டேட் பிரச்சனைகள்

👉சிறுநீர்ப்பை கற்கள்

போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம்.

ஒருவரின் சிறுநீர்ப்பையில்
200 அல்லது 300 மி.லி அளவு சிறுநீர் தேங்கும் போதே அடிக்கடி சிறுநீர் வந்தால் அது ஏதோ ஒரு உடல்நிலை தொடர்பான பிரச்னையின் ஆரம்பமாகும்.

💢 இது போன்ற கட்டுப்பாடற்ற சிறுநீர் பிரச்சனைகளுக்கு, தனது சிறுநீர் பையில்……

👉காசநோய் ,

👉தொற்றுநோய்,

👉புற்றுநோய்

👉மன அழுத்தம்

போன்ற பிரச்சனைகளின் காரணமாகக்
கூட இருக்கலாம்.

ஆனால் இந்த நோய்களின் மூலம் எந்த காரணத்தால் சிறுநீர் அடிக்கடி வருகிறது என்பதை மட்டும் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயம் உண்டு.

💢 எனவே அடிக்கடி சிறுநீர் பிரச்சனைகள் ஏற்பட்டால்……

👉காசநோய்,

👉நீரிழிவுநோய்,

👉புற்றுநோய்

இது போன்ற நோய்களுக்கான பரிசோதனையை செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

👨 ஆண்கள்

அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதால் ஆண்களுக்கு எரிச்சல் உணர்வு, வலி போன்றவை உண்டாகலாம். பால்வினை நோய் தொற்று, சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக கற்கள், புரோஸ்டேட் கோளாறுகள் இருந்தால் இதுப் போன்ற உணர்வு ஏற்படும். நீரிழிவு மற்றும் வலிநிவாரண மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் கூட ஆண்கள் மத்தியில் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணியாக விளங்குகின்றன.

👩 பெண்கள்

கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு கருப்பை பெரிதாகிவிடும். மேலும், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்து காணப்படும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதிலும், இரு வகை இருக்கிறது, சிலருக்கு சிறிதளவு சிறுநீர் கழியும், சிலருக்குபெருமளவு சிறுநீர் கழியும் எனப்படுகிறது.

⏩ காரணங்கள்.

தொடர்ச்சியான சிறுநீர் கழித்தல் (Frequent Urination) ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளது. முதல் காரணம் சிறுநீரின் உற்பத்தி அளவு அதிகரிப்பது. மற்றொன்று சிறுநீர்பை செயலிழப்பு. இதனை ஓவர்ஆக்டிவ் ப்ளேடர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கான மேலும் சில காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.👇👇👇

👉அளவுக்கு அதிகமான நீர்

ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீரைக் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என முன்பு படித்திருப்பீர்கள். ஒரு நாளில் ஒருவர் நீரை மட்டும் குடிப்பதில்லை. அத்துடன் இதர பானங்களான காபி, டீ, ஜூஸ் என்று பலவற்றையும் குடிக்கிறோம். எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இல்லை. எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் பானத்தைக் குடிக்கிறார்களோ, அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

👉சிறிய சிறுநீர்ப்பை

ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதேப் போல் உள்ளுறுப்புக்களின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவரசமாக வருவது போன்ற உணர்வு எழும். சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1-1.5 கப் சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.

👉உடல் வறட்சி

அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு உடல் வறட்சியும் ஓர் காரணம் என்று கூறுவது சற்று ஆச்சரியத்தை வழங்கலாம். எப்படி உடலில் போதிய நீர் இல்லாமல், சிறுநீர் உற்பத்தியாகும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் ஆய்வு ஒன்றில், உடலில் போதுமான அளவு நீர் இல்லாத போது, சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும். சிறுநீரின் அடர்த்தி அதிகம் இருக்கும் போது, அது சிறுநீர்ப்பையில் எரிச்சலை உண்டாக்கி, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு எழும்.

👉சிறுநீரக கற்கள்

நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

👉பலவீனமான இடுப்பு தசைகள்

இடுப்புப் பகுதியைச் சுற்றிய தசைகள் அல்லது அடிவயிற்றுப் பகுதி பலவீனமாக இருந்தால், அது சிறுநீரை அடக்க முடியாமல் செய்யும். இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் தான் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர்ப்பையை சுருங்கச் செய்து, சிறுநீரை வெளியேற்றுகிறது. இத்தகைய இடுப்பு தசைகள் போதிய வலிமையுடன் இல்லாவிட்டால், அதனால் சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனைத் தவிர்ப்பதற்கு இடுப்பு தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

👉 குறிப்பிட்ட மருந்துகள்

நீங்கள் உயர் இரத்த அழுத்தம், சரும அலர்ஜி, மன இறுக்கம் போன்றவற்றிற்கு மாத்திரைகளை எடுப்பவர்களாயின், தற்காலிகமாக சிறுநீர்ப்பை பலவீனமாகி, அடிக்கடி சிறுநீரை கழிக்கச் செய்யும். ஆகவே இம்மாதிரியான பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி, அவரிடம் உங்களது பிரச்சனையைக் கூறி, தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்.

👉அடிவயிற்றில் சிறுகட்டி

அடிவயிற்றுப் பகுதியில் சிறு கட்டிகளின் வளர்ச்சி இருந்தால், அதுவும் ஒருவரை அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்யும். ஏனெனில் இந்த கட்டிகள் சிறுநீர்ப்பையில் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும் போது, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு எழும். எனவே இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி ஸ்கேன் செய்து தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே நீண்ட நாட்களாக இப்பிரச்சனை இருப்பின் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

👉தாழ் இரத்த அழுத்தம்

உங்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், தலைச்சுற்றல், உடல் சோர்வு போன்றவற்றுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும். எனவே உங்களுக்கு தாழ் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி, போதிய சிகிச்சையை தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

👉 இறுதி மாதவிடாய்

45 வயதிற்கு மேல் ஆன பெண்களுக்கு இறுதி மாதவிடாய் காலம் நெருங்கும். இந்த காலத்தில் பெண்கள் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், சிறுநீர்ப்பையில் எரிச்சல் ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்கிறது

👉சிறுநீர்ப்பை தொற்று

நமது உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாயின் பெயர் யுரேத்ரா ஆகும். யுரேத்ராவிலும் , சிறுநீர் பையிலும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் ஏற்படும் போது நமக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த தொற்று சிறுநீர்பையை சுத்தம் செய்து கொண்டே இருக்கும்படி செய்யும். இதுவே நாம் தொடர்ச்சியாக சிறுநீர் கழிக்க காரணமாகும். இந்த தொற்று ஏற்பட்டால் நீங்கள் வழக்கமாக கழிக்கும் சிறுநீரின் அளவை விட குறைவான அளவே கழிப்பீர்கள்.

👉சர்க்கரை நோய்

முதல் வகை, இரண்டாம் வகை இரண்டு சர்க்கரை நோய்க்குமே முதல் அறிகுறி தொடர்ச்சியான சிறுநீர் கழித்தல்தான். நமது உடல் பயன்படாமல் இருக்கும் குளுக்கோஸை சிறுநீர் வழியாக வெளியற்றிக்கொண்டே இருக்கும். சர்க்கரை நோயால் ஏற்படும் நரம்பு கோளாறுகளும் சிறுநீர்ப்பையை பாதிக்கும். இதுவும் உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும்.

👉சிறுநீரக செயல்பாடு

இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காகவோ அல்லது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவோ நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம். இந்த மாத்திரைகளில் உள்ள இரசாயனங்கள் சிறுநீரகத்தை அதிகமாக செயல்பட வைத்து உடலில் உள்ள நீரை வெளியேற்ற சிறுநீரகத்தை தூண்டும். அதனில் நீங்கள் அடிக்கடி கழிவறையை நோக்கி ஓடிஏ நேரும்.

👉புரோஸ்ட்ரேட் பிரச்சினை

புரோஸ்ட்ரேட் சுரப்பியின் அளவு பெரிதாவது யுரேத்ரா மீது அழுத்தத்தை ஏற்படுத்தி அதிகமாக சிறுநீர் வெளியேறும்படி செய்யும். இதனால் சிறுநீர் பையின் சுவர்களில் எரிச்சல் ஏற்படும். இதனால் குறைந்த அளவு சிறுநீர் இருந்தாலும் உடனே அதனை வெளியேற்ற சிறுநீர்ப்பை முயற்சிக்கும்.

👉கர்ப்பகாலம்

ஹார்மோன்கள் மாறுபாடு மற்றும் கருப்பையில் ஏற்படும் வளர்ச்சி இதனால் சிறுநீர் பையில் ஏற்படும் அழுத்தத்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். இது கரு உருவான ஐந்தாவது வாரத்தில் இருந்தே தொடங்கிவிடும். பிரசவத்தின்போது ஏற்படும் அதிர்வுகள் கூட யுரேத்ராவை பாதிக்கும்.

👉சிறுநீர் முடக்கம்

இது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வதை தடுப்பதற்காக நடப்பது, சிரிப்பது, இருமுவது போன்ற இயற்கை செயல்களுக்கும் முட்டுக்காடு போடும்போது அது சிறுநீர் பையில் அதிக அழுத்தத்தை உண்டாக்கும். எனவே பெண்கள் முடிந்த வரை சிறுநீர் கழிக்க செல்வதை தள்ளிப்போடாதீர்கள்.

👉இடுப்புவலி

சிறுநீர்ப்பை மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் வலி கூட தொடர்ச்சியான சிறுநீர் கழித்தலுக்கு காரணமாய் அமைகிறது. இடுப்பு பகுதியில் வலி அதிகம் இருக்கும்போது சிறுநீர் கழிப்பது தற்காலிக வலிநிவாரணியாக அமையும்.

👉நரம்பியல் கோளாறுகள்

சிறுநீர் பையுடன் தொடர்பில் உள்ள நரம்புகளில் பிரச்சினை ஏற்படும் போது அது சிறுநீர் பையின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தொடர்ச்சியாக சிறுநீர் கழிப்பது அல்லது நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

👉OAB நோய்

இது ஒவர் ஆக்டிவ் பிளேடர் என்னும் நோயாகும். சிறுநீரகத்தில் தொற்று , சிறுநீரக கல், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவை இது ஏற்பட காரணமாக அமைகிறது. இதனால் சிறுநீர்ப்பை எப்போதும் காலியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே சிறிது நீர் அருந்தினாலும் நீங்கள் உடனடியாக சிறுநீர் கழிக்க நேரிடும்.

👉செயற்கை காரணங்கள்

தொடர்ச்சியாக சிறுநீர் கழிக்க சில செயற்கை காரணங்களும் இருக்கிறது. அதிகளவு மது அருந்துதல், காஃபைன் எடுத்து கொள்ளுதல் போன்றவை இதனை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்கள், அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் போன்றவை கூட சிறுநீர் பையில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

இயற்கை தீர்வுகள்.

⭕அடிக்கடி சிறுநீர்கழித்தல் தீர

அடிக்கடி சிறுநீர்கழித்தலால் உடலுக்கு ஒரு
களைப்புநிலை ஏற்படுகிறது.மேலும்
சிறுநீரகத்தின் வேலைத்திறனும் அதிகரிக்கிறது. இக்குறை நீக்க மஞ்சள்
பெரிதும் பயன்படுகிறது.

⭐ ஆவாரம்பூ – 30கிராம்

கடுக்காய் – 30 கிராம்

தென்னம்பூ – 30கிராம்

மாதுளம்பூ – 30கிராம்

கடுக்காய்பூ – 30 கிராம்

விரலிமஞ்சள் – 30 கிராம்

இவையனைத்தையும்தூள்செய்துவைத்துக்கொள்ளவும். இதில்காலை, மாலை, இரவு எனமூன்று வேளைக்கு 2 கிராம்வீதம் சாப்பிட அடிக்கடி சிறுநீர்கழித்தல் நீங்கும்.

⭐ கருப்பு எள் – 5 கிராம்(1 ஸ்பூன்)

மஞ்சள் – 2கிராம்

பருத்திவிதைப் – 5 கிராம்பருப்பு

மூன்றையும் வெந்நீர் விட்டரைத்து, சாப்பிட அடிக்கடிசிறுநீர் போதல் குணமாகும்.

🌟 வாழைப்பூவுடன்
சிறிதுமஞ்சள் சேர்த்தரைத்து, நெல்லிக்காய் அளவுசாப்பிட அடிக்கடி சிறுநீர்கழித்தல் நீங்கும்.

🌟 நல்லெண்ணெய் 10மி.லி அளவு
எடுத்துக்கொண்டுஅதில் 3 சிட்டிகை மஞ்சள் தூள்சேர்த்து, உள்ளுக்கு சாப்பிட, அடிக்கடி சிறுநீர் இறங்குதல்குணமாகும்.

🌟 படிகார பற்பத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, தயிரில்
சாப்பிட, அடிக்கடிசிறுநீர்போதல் நிற்கும்.

🌟 நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய நன்னாரி வேரை
இடித்து நீர் விட்டு கொதிக்கவைக்க வேண்டும்.

நீர் பாதியாக வற்றியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்துக் குடித்தால்
(இது நன்னாரி மணப்பாகு என்றழைக்கப்படுகிறது), எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

👉முக்கியமாக சொட்டு மூத்திரம்,

👉சிறுநீர் கழிக்க சிரமப்படுதல்,

சிறுநீர் கழிக்காததால் அடிவயிற்றில் ஏற்படும் வலி உள்ளிட்ட சிறுநீர் சம்பந்தப்பட்ட உபாதைகளை இந்த நன்னாரி பானம் சரிசெய்யும்.

⭐ உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் நன்னாரி மணப்பாகை 15 முதல் 25 மில்லி வீதம் சில நாட்கள் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

5 கிராம் பச்சை நன்னாரி வேரை அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் சரியாகும்.

மேலும், பொதுவாக நன்னாரி உடல் வியர்வையை கூட்டுவதோடு, ரத்தத்தை தூய்மைப்
படுத்தக்கூடியது;

தாராளமாக நீர் இறங்கச் செய்யக்கூடியது,

ஆண் – பெண் உறுப்புகளில் வரக்கூடிய ரணத்துடன் கூடிய புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது நன்னாரி.

💚மாதுளை.

மாதுளையின் தோலை நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். சிட்டிகை அளவு பேஸ்ட்டை சில துளி நீர் கலந்து பருகுங்கள். ஒருநாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதை பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

💚கொள்ளு.

நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொள்ளுங்கள். சிறுநீர் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. கொள்ளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்