இரட்டை பிறவிகளைப் போன்று தோற்றமளிக்கும் பிரபலங்கள் !

உலகில் ஒரே மாதிரியான ஏழு பேர் இருப்பார்கள் என்று கூறுவார்கள். உண்மையில் அப்படியான தோற்றத்தையுடைய மனிதர்கள் உள்ளனர். வீதியில் அவர்களில் இருவர் சந்தித்துக் கொண்டால் இருவருக்கும் தலை சுற்றி விடும். அது மட்டுமல்லாமல் ஒருவர் செய்த குற்றத்திற்கு இன்னொருவர் தண்டனை அனுபவிக்கும் நிலையும் ஏற்படும். இதுபோன்ற விடயங்களை படங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் பிரபலங்களில் இருவர் அவ்வாறு சந்தித்தால் என்ன நடக்கும்? ஆம் அவ்வாறு இருக்கக்கூடிய ஏழு இரட்டையர்களை பற்றிதான் இன்று நாம் பார்க்கப்போகின்றோம்.

 

HEATH LEDGER  மற்றும் JOSEPH GORDAN

எல்லோராலும் அதிகம் நேசிக்கப்படக்கூடிய ஒருவரே ஹீத் லெட்ஜ்ர். இவர் அகால மரணமடைந்தமை அனைவரும் அறிந்ததே. வாழ்க்கையில் சந்தித்த சிறந்த ஜோக்கர் என்றும் இவரை அதிகமானோர் கூறுவர். அதே சந்தர்ப்பத்தில் 500 Days of Summer படத்தில் நடித்தவர் ஜோசப். இருவரும் சந்தித்தது 10 Things I Hate About You எனும் திரைப்படத்தில்தான். அங்கிருந்துதான் இருவரும் ஒருவர் அல்லர், வேறு வேறு என்பது உலகிற்கு தெரிந்தது. அதில் சிலர் இருவரும் சகோதர்கள் எனவும் எண்ணினார்கள்.

 

ED SHEERAN மற்றும் ROBERT GRIND

ரொபர்ட் க்ரின்ட் என்பவரை ஹர்ரி பொட்டர் திரைப்படத்தில் ரோன் விஸ்லி கதாபாத்திரத்தின் மூலம் எமக்கு தெரியும். அதன் பின்னர் பிரபல பாடகர் எட் ஷீரணியையும் நம்மில் பலருக்கு தெரியும். இருவரும் ஒரே மாதிரி முகமும் தோற்றமும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமாத்திரமின்றி எட் ஷீரனின் ஒரு பாடலில்கூட ரொபர்ட் நடித்துள்ளார் .

 

ANUSHKA SHARMA மற்றும் JULIYA MICHELS

நமக்கு அனுஷ்கா சர்மாவை நன்கு தெரியும். இலங்கையின் அருகிலுள்ள நாடான இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் மாத்திரமின்றி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவியும் ஆவார். நாம் அறிய வேண்டியது ஜூலியா மைக்கல்ஸை பற்றி மாத்திரமே. இவர் ஒரு அமெரிக்க பாடகி. ஜூலியா தனதும் அனுஷ்காவினதும் படத்தை இணைத்து எடிட் செய்து ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார். அதற்கு அனுஷ்கா ஷர்மாவும் வியக்கும் விதத்தில் நடந்து கொள்வார். இருவருக்கும் இடையில் உருவ ஒற்றுமை அபூர்வம்.

 

HRITHIK ROSHAN மற்றும்  BREDLY KOOPER

உலகில் ஒரே மாதிரியாக இருப்பது இவர்கள்தான். ரித்திக் ரோஷன் இந்தியாவிலுள்ள கிரீக் தெய்வங்கள் போல அழகாக இருப்பார். அதேபோல் பிரெட்லி குப்பரும் சிலை போல அவ்வளவு அழகாக இருப்பார். இருவரும் கண், மூக்கு, தாடை, சிரிப்பு போன்ற உறுப்புக்களில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருப்பார்கள்

 

BOY GEORGE மற்றும் SOFI TURNER

போய் ஜோர்ஜ் 80களில் சிறந்து விளங்கிய பாடகராவார். கடந்த காலங்களில் நமது ஸ்ரீ இயற்றிய பாடலும் இதன் இசைக்கு சம்பந்தமாகத்தான் செல்கின்றது. இங்கே நாம் அடுத்ததாக உள்ளவர் சோபி டர்னர். இவர் ஒரு பெண்ணாவார். போய் ஜோர்ஜின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க சோபி தீர்மானித்துள்ளார். ஏனென்றால் அவர் தனது சொந்த பாலியல் அடையாளத்தை தீர்மானித்ததாலும், அவர் அதனைக்கொண்டு அதிருப்தி அடையவில்லை என்பதாலும் ஆகும்.

 

DANIEL RADCLIFFE மற்றும் ELAIJA WOOD

இவர்கள் இருவரும் எமது சிறுவயதில் பரீட்சயமான இரு கதாபாத்திரங்களில் நடித்தவர்களாவர். ஒருவர் டேனியல். இவரை நாம் டேனியல் என்பதை விட ஹர்ரி பொட்டர் என்று கூறினாலே நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்புண்டு. அடுத்தவர்தான் LORD OF THE RINGS திரைப்படத்தில் நடித்த எலிஜா. இந்த படத்தில் பிரோடோ பெகின்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர். இவர்கள் இருவரினதும் ஒற்றுமை என்பது நம்மில் பலருக்கு வியப்பை ஊட்டக்கூடியதாகும்.

 

KATTY PERRY மற்றும் ZOOEY DESCHANEL

கேட்டி பெர்ரி ஒரு பாடகர் என்பது அநேகமானோருக்கு தெரியும். ஆனால் இந்த சோய் என்பவர் யார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. TIN MAN எனும் ஒரு தொடரில் பிரதான கதாபாத்திரமாக DG  யாக இருந்தது இவரே. இது மட்டுமின்றி 500 Days of Summer படத்தில் கதாநாயகியும் இவரே. இவர்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பார்கள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.