உலகம் முழுக்க ஆண்களின் மரணத்திற்கு காரணமாக இருப்பது பெரும்பாலும் இந்த நோய்கள்தானாம் ஜாக்கிரதை…

ஆண்களைப் பாதிக்கும் பொதுவான நோய்களில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை, ஆனால் ஆண்களின் அலட்சிய உணர்வு அவர்களை நோய்களிடமிருந்து தப்பிக்க அனுமதிப்பதில்லை. இதில் சுவாரஸ்யமானது என்னவெனில் முதலில் வரும் ஒரு நோய் மற்றொரு நோயை வரச்செய்கிறது. மேலும் சில நோய்கள் இருப்பதால் இன்னொன்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இதய நோய், பக்கவாதம், புற வாஸ்குலர் நோய் மற்றும் முதுமை என அனைத்தும் குறிப்பிட்ட காரணிகளால் மட்டுமே ஏற்படுகின்றன. புகைபிடித்தல், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, குடும்பத்தின் மூலம் என இதனாலேயே பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. உலகம் முழுவதும் ஆண்களை அதிகம் கொல்லும் நோய்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதய நோய் உலகம் முழுவதும் ஆண்களை கொல்லும் நோய்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இதய நோய்தான். மொத்த ஆண்களின் மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு மரணத்திற்கு இதய நோய் காரணமாக இருக்கிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், குடும்ப பின்னணியும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது

புற்றுநோய் ஆண்களில் புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது, இது தடுக்கக்கூடியது என்றாலும் ஆபத்தானதுதான். புகைபிடித்தல் அனைத்து நுரையீரல் புற்றுநோய்களிலும் 90% காரணமாகிறது. புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாகும், மேலும் இது வயதான காலத்தில் ஏற்படும் நோயாகும், இது 50 வயதுக்கு குறைவான ஆண்களில் அரிதாகவே காணப்படுகிறது.

காயங்கள் மற்றும் விபத்துகள் விபத்துகள் என்பது எதிர்பார்த்த நேரத்தில் நடப்பவை மற்றும் தற்செயலானவை. ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவிலான ஆண்களின் மரணங்கள் விபத்துகளால் ஏற்படுகின்றன. மரண அபாயத்தைக் குறைப்பதற்கான திறவுகோல் பொது அறிவைப் பயன்படுத்துவதும் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதும் ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.