டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தாலும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்றம் சென்றுள்ளார் என்பதும் அமெரிக்க வரலாற்றில் தோல்வி அடைந்த அதிபர் ஒருவர் நீதிமன்றம் சென்று இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

 

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கில் அவ்வப்போது தேர்தல் குறித்த தகவல்களையும் தனது வெற்றி பறிக்கப்பட்டது குறித்தும் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் திடீரென அவரது டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அதனால் அவரது டுவிட்டர் கணக்கு 12 மணி நேரத்திற்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதே போன்று தொடர்ந்து தவறான தகவல்களை தனது ட்விட்டர் கணக்கில் டிரம்ப் பரப்பி வந்தால் அவரது கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் ட்விட்டர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
அமெரிக்க அதிபருக்கு எதிராக டுவிட்டர் நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.