அபுதாபி டிக்கெட் – கேரள இளைஞருக்கு 40 கோடி அடித்த அதிர்ஷ்டம்!

டியூட்டி ஃப்ரீ பிக் டிக்கெட்’ என்ற பெயரில் அபுதாபியில் குலுக்கல் பரிசு நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த டிக்கெட்டுகளின் பரிசுகள் அனைத்துமே கோடிகளில் தான் இருக்கும். பரிசு விழுந்தால் அவர் கோடீஸ்வரர்தான்.

இந்த டிக்கெட் வாங்குபவர்களின் செல்போன் எண்களை பிக் டிக்கெட் நிறுவனத்தினர் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். அப்படி சம்பந்தப்பட்ட நபருக்கு பரிசு விழுந்தால், பிக்டிக்கெட் நிறுவனத்திடமிருந்து போன் வரும். அவர்கள் செல்போன் நம்பர் மூலமாக தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிப்பார்கள். இது தான் நடைமுறை. இந்நிலையில், அண்மையில் நடந்த குலுக்கலில் முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? 40 கோடி ரூபாய்.  ஆயிரக்கணக்கானோர் இந்த டிக்கெட்டை வாங்கி இருந்தனர்.

இந்நிலையில் குலுக்கலில் 323601 என்ற எண்ணுக்கு முதல் பரிசான ₹40 கோடி கிடைத்துள்ளது. குலுக்கலில் வெற்றி பெற்ற நபருக்கு, இந்த தகவலை தெரிவிப்பதற்காக, அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு பிக் டிக்கெட் நிர்வாகிகள் அழைத்தனர். ஆனால் தொலைபேசி எண் ரீச் ஆகவில்லை. பல நாட்களாக தொடர்ந்து அழைப்பு விடுத்த நிர்வாகிகளுக்கு நாட் ரீச்சபுல் என்ற பதிலே கிடைத்தது.

இதன் காரணமாக அந்த டிக்கெட்டை வாங்கியவர் யார் என தெரியாமல் இருந்தது.

இதைத் தொடர்ந்து இந்த விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. இதன் பிறகு தான் 40 கோடிக்கான அந்த அதிர்ஷ்டசாலி யார் என தெரியவந்தது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் சலாம் (28) என்ற வாலிபர் தான் இந்த அதிர்ஷ்டத்துக்கு சொந்தக்காரர். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

பிக் டிக்கெட் வாங்கும் போது அவர் கொடுத்த செல்போன் எண்ணுடன் இந்தியாவின் 91 என்ற கோட் நம்பரையும் சேர்த்து கொடுத்துள்ளார். இது தான் பிரச்னையாக மாறியுள்ளது. அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. இதையடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், “தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கினேன். பரிசுத் தொகையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன்,” என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்