கொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..!

 

கொரோனா பயத்தால் (CoronaVirus) விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்துள்ளார் ஒரு கோடீஸ்வரர்.

இயல்பாக விமானத்தில் பறக்க வேண்டும் என்றாலே அவர் பணக்காரர் என நாம் நினைப்பது உண்டு. ஆனால், பயணம் என்றாலே அது விமானத்தில் தான் என்ற அளவு பணக்காரர்களும், இருக்கிறார்கள். இதற்கிடையில், தாங்களின் சொந்த பயணிப்பதற்காகவே தனி விமானங்களை வைத்திருக்கும் பணக்காரர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில், தாய்லாந்து ஜகர்தா (Jakarta) பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சர்டு முல்ஜாடி (Richard Muljadi), இவர் தனது தனித்துவமான லைப்ஸ்டைலில் பிரபலமானவர். இவர் சமீபத்தில் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பலரை ஆச்சரியப்படுத்தியது. இவரும் இவரது மனைவி சில்வீங் சங் என்பவரும் ஜகர்தாவிலிருந்து பாலி (Jakarta to Bali) வரை பாடிக் என்ற விமான நிறுவன விமானத்தின் அனைத்து டிக்கெட்களையும் வாங்கியதுடன், விமானத்தில் பணிப்பெண்கள் இல்லாமல் தனது சொந்த விமானம் போலப் பறந்துள்ளனர்.

 

இதற்கு அவர் சொன்ன காரணம் தான் பயங்கரம், அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா குறித்த அதீத பயம் இருக்கிறதாம். இந்த நேரத்தில் மற்ற பயணிகளோடு பயணம் செய்வது என்பது மிகவும் பயத்தை ஏற்படுத்தும் என்பதால் அத்தனை டிக்கெட்களையும் வாங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

 

அந்த விமானத்தில் (Batik Air) மொத்தம் 12 பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்கள் மற்றும் 150 எகானமி கிளாஸ் டிக்கெட் என மொத்தம் 162 டிக்கெட்கள் உள்ளது. இவரது பதிவை அந்த விமான நிறுவனமும் ஏற்றுக்கொண்டு குறிப்பிட்ட விமானத்தில் அந்த இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ததாக தெரிவித்தனர். விமான டிக்கெட் குறித்துக் குறிப்பிட்ட முள்ஜாடி, அத்தனை விமான டிக்கெட்களையும் வாங்குவது, ஒரு விமானத்தை வாடகைக்கு எடுப்பதை விடக் குறைவான விலைதான் என குறிப்பிட்டிருந்தார். இவர் எந்த முறையில் விமான டிக்கெட்களை எல்லாம் வாங்கினார் என்பது யாருக்கும் தெரியவில்லை

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்