யாழ். பல்கலை வளாகத்தில் அமைந்திருந்த தமிழர் நினைவுத்தூணை அழிக்க எடுக்கப்பட்ட முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்!

இலங்கை  அரசினால் 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுத் தூபி இலங்கை அதிகாரிகளாலும் தகர்த்தழிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுத் தூபியானது, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின்போது கொல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும் இடமாக விளங்கியது. தமிழின அழிப்பு நினைவுச்  சின்னத்தினை அழிப்பதென்பது முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நினைவுச் சுவடுகளை இல்லாதொழிப்பதுடன், இலங்கை அரசின் அனைத்துத் தவறுகளையும் மூடிமறைப்பதற்கான நடவடிக்கையாகும்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த வர்த்தகரும் ஸ்காபரோ றூஜ் பார்க் வாசியுமான கார்த்திக் நந்தகுமார் அவர்கள், நடைபெற்றுள்ள இன்றைய நிகழ்வு தனக்கு யாழ்ப்பாண நூலக எரிப்பு சம்பவத்தினை நினைவுபடுத்தியதெனத் தெரிவித்துடன், அரிய பல நூல்களையும் தமிழரின் வரலாற்றுச் சான்றுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் 1981ஆம் ஆண்டு மே 31ஆம் திகதியன்று   தீயிட்டு அழிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

நினைவுச் சின்னங்கள், சிலைகள், தூபிகள் போன்றவை இறந்தவர்களை நினைவுகூரும் விதத்தில் மக்களால் நிறுவப்படுள்ளவை. இவற்றினை அழித்தி செயலானது இறந்தவர்களை நினைவுகூர விடாது தடுத்திருப்பதுடன், தமிழ் மக்களுக்கு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.

நடைபெற்றவைகளின் நினைவுகளைச் சிதைப்பது, தவறுகளை மூடிமறைப்பது, சாட்சிகளை அழிப்பது போன்றவை இன அழிப்பின் இறுதிக் கட்டமாகக் கருதப்படுபவை. மிர்கோ கேர்மிக் என்பவரால் குறிப்பிடுவதுபோல், வல்லாதிக்கங்கள் தமது வரலாற்றின் இருண்ட பக்கங்களை அகற்றி தமக்கு வேண்டியவாறு வரலாற்றினை மாற்றி எழுதுகின்றன. இவற்றுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் நடைபெற்றவற்றை எடுத்துரைக்கும் நினைவுச்  சின்னங்கள், நினைவு நிகழ்வுகள் அழிக்கப்படுகின்றன அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் அடிப்படையில்தான் அரசினால் நடத்தப்பட்ட அட்டூழியங்களின் சான்றாக விளங்கிய இந்த நினைவுச் சின்னமும் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.

ஸ்காபரோ றூஜ் பார்க்கில் வசிக்கும் இன்னொருவரான சுகாதாரத் துறையில் பணிபுரியும் திவ்வியா சாந்தக்குமார் கருத்துத் தெரிவிக்கும்போது, சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் வட-கிழக்கு பகுதிகளை படையினரின் ஆதிக்கத்தினுள் தொடர்ந்தும் வைத்திருப்பதுடன் தமிழர்கள் கொல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கும், அவர்களின் நினைவுச் சின்னங்களைப் பேணுவதற்கும் தடைபோட்டு வருகின்றது என்றார்.

அரசாங்கம் தொடர்ந்தும் தமிழர்கள் மீதான தனது இன அழிப்பை மறுத்து வருகின்றது.  இச்செயலானது தமிழர்கள் தமக்கு நடைபெற்ற அழிவின் நினைவுகளிலிருந்து மீண்டு தமக்கான புதியதொரு வாழ்க்கையை தொடங்க விடாது தடுக்கின்றது. எனவேதான், 104வது சட்டமூலம் மிக மிக அவசியமானதாகும். இந்தச் சட்டமூலம் ஒன்ராறியோவில் உள்ள தமிழ் மக்களுக்கு இன அழிப்பினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பினைக் குறைக்க உதவும்.இந்நேரத்தில், எமது கனடிய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.