தமிழில் ‘வணக்கம்’ கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தமிழில் ‘வணக்கம்’ என்று கூறி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாட இருப்பதாகவும் கூறினார்.

மேலும் ,”வணக்கம், பிரிட்டனில் உள்ள தமிழ் சமூகத்தினருக்கு தை பொங்கல் வாழ்த்துகள். இயற்கையின் அருட்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பொங்கல் கொண்டாடப்படுகிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பணி செய்தமைக்கு உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், இந்த இக்கட்டான காலத்தில், கடின உழைப்பு, ஒழுக்கம் போன்றவை பிரகாசமாக இருந்தது. முன்கள பணிகளில் தமிழ் மருத்துவர்கள் துணிச்சலுடன் பணியாற்றினர்” என்று அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்