காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு 14 வயது சிறுமியின் ஆலோசனையை நாடினார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு 14 வயது சிறுமியின் ஆலோசனையை நாடியுள்ளார்.
கார்டிவை சேர்ந்த அனாஹேர்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி இது தொடர்பில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

நான் இது குறித்து ஆச்சரியமடைந்தேன் இது உண்மையிலேயே அற்புதமான வாய்ப்பு என அனா தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் மிகவும் துணிச்சலானது என அவர் தெரிவித்துள்ளார்.

பூமியை பாதுகாப்பதற்கு அனைவரும் அதிகளவிற்கு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தெரிவித்துள்ள அனா அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு இந்த செய்தியை தெரிவிப்பதற்கு ஆர்வமாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எங்களால் மிகவும் சுலமான சில விடயங்களை செய்யமுடியும் வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதில் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்த முடியும் பிளாஸ்டிக்கினை பயன்படுத்துவதை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய விளையாட்டுபோட்டிகளில் மிகவும் குறைந்த வயதில் (11) கலந்துகொண்டவர் என்ற வரலாற்று சாதனையை நிலைநாட்டியவர்

அனாஹேர்சி விளையாட்டில் காலநிலை மாற்றத்திற்கான ஐக்கியநாடுகளி;ன் சம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் சூழல் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் இது தொடர்பில் பொறுப்புணர்வை அதிகரிக்கும் ஐநாவின் கட்டமைப்பில் சுமார் 110 விளையாட்டு அமைப்புகள் கைச்சாத்திட்டுள்ளன.

தனது நிகழ்ச்சி நிரலில் காலநிலை மாற்றத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.