ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம் – சவூதி அரசு அறிவிப்பு

ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று பெற்றிருப்பது கட்டாயம் என சவூதி அரசு அறிவித்துள்ளது.

சவூதிஅரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சவூதியில் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் சென்று வரும் நிலையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்