வங்கதேசத்தில் கப்பலில் மோதி படகு கவிழ்ந்ததில் 26 பேர் பலி!

வங்கதேசத்தில், மணல் ஏற்றிச்சென்ற கப்பலில் மோதி படகு கவிழ்ந்ததால், 26 பேர் பலியாயினர்.
வங்கதேச தலைநகர் டாகாவில், பங்களா பஜார் பகுதியில், பத்மா ஆற்றின் படித்துறையில் இருந்து, நேற்று ஒரு படகு பயணியருடன் புறப்பட்டது. முறையான பயிற்சி பெறாத ஒரு சிறுவன், படகை ஓட்டிச்சென்றதாக தெரிகிறது.அளவுக்கு அதிகமான பயணியருடன், மிக வேகமாகச் சென்ற படகு, ஆற்றின் நடுப்பகுதியில், மணல் ஏற்றிச்சென்ற கப்பல் மீது மோதி கவிழ்ந்தது. இதில், 26 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாயினர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர், உயிருக்கு போராடிய ஐந்து பேர் மற்றும் பலியானோர் உடல்களை மீட்டனர். படகில் பயணித்தோர் எண்ணிக்கை உறுதியாக தெரியாததால், தேடுதல் பணிகள் தொடர்வதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்