காஸா மீதான தாக்குதல்கள் தொடரும் – இஸ்ரேல் அறிவிப்பு

பலஸ்தீன – காசா பிரதேசத்தின் மீதான போர் நிறுத்தம் இதுவரை அமுலுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவின் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். காசாவில் எப்போதும் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்ற காலப்பகுதியை அறிவிக்க முடியாது இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இஸ்ரேலின் வடபகுதி மீது லெபனான் ஆள் புலத்திலிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. லெபனானில் இருந்து தமது ஆள் புலத்தின் மீது நான்கு வகை தாக்குதல்கள் நடத்தப்பட்டதை இஸ்ரேல் இராணுவத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த 10ஆம் திகதி தொடக்கம் 11நாட்களில் இஸ்ரேல் காசா பிரதேசத்தின் மீது தொடர்ச்சியாக நடத்திவரும் வான் தாக்குதலில் இதுவரை 227 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இதில் 64-க்கும் அதிகமான சிறுவர்களும் குழந்தைகளும் 38 பெண்களும் இடம்பெற்றிருப்பதாக அல்ஜசீரா இணையத்தளம் அறிவித்திருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.