ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை: சிங்கப்பூர் அனுமதி

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை முறைக்கு சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலையின் கீழ் செயல்படும் ‘பிரிதோனிக்ஸ்’ நிறுவனம் ‘பிரித்அலைசர் சோதனை’ மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் கருவியை உருவாக்கியது.
இதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்தாண்டு பரிசோதனையில் இக்கருவி, 90 சதவீதம் துல்லியமான முடிவுகளை வெளியிட்டது தெரிந்தது. சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள ‘ஆன்டிஜன் ரேபிட் டெஸ்ட்’ பரிசோதனையுடன், இப்பரிசோதனை முறையும் பயன்படுத்தப்படும்.
இக்கருவியின் முனையில் உள்ள, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சிறிய பைப் ஒன்றில் வாய் மூலம் ஊத வேண்டும். இதன்பின் இக்கருவி அதை சோதித்து அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை ஒரு நிமிடத்துக்குள் தெரிவித்து விடும்.
இதில் பாதிப்பு உறுதியானவர்கள் அடுத்ததாக கட்டாயம் ‘ஆர்.டி. – பி.சி.ஆர்.,’ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இத்தொழில்நுட்பம் நெதர்லாந்து, இந்தோனேசியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்