சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி

உலகின் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடான சீனா தான் பின்பற்றி வந்த குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை தளர்த்தியுள்ளது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை என கட்டாயமாக பின்பற்றி வரப்பட்ட சீனாவின் பிறப்பு வீதம் மிக வேகமாக அதிகரித்து வரும் முதியோர் சமூகத்தின் எண்ணிக்கை காரணமாக 2016 இல் ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் என அதிகரிக்கப்பட்டது.
சீன அரசாங்கம் பிறப்பு வீதத்தை அதிகரிக்க ஊக்குவித்த போதும் national bureau of statistics இன் கடந்த மாதம் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின் படி 2020 இன் பிறப்பு வீதம் 12மில்லியன் ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சீனாவில் இளைஞர்களுக்கான பற்றாக்குறையுடன் 2050 களில் 100மில்லியனுக்கும் மேலாக வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்த சமூகத்தின் துரித அதிகரிப்பு மற்றும் பொருளாத்தில் ஏற்படக்கூடிய தேக்கத்தை குறைக்கும் முகமாக சீன அதிபர் xi jinping ஆல் நடத்தப்பட்ட China’s elite polit buro leadership committee கூட்டத்தில் சீனாவில் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகள் வீதம் பெற்று கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

National bureau of statistics இன் சனத்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது அதன் படி சீனாவின் சனதோகை வளர்ச்சி வீதம் 1960 களில் இருந்து வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போதய சீன சனத்தோகை 1.41பில்லியன் ஆகும்
இருப்பினும் சீனாவில் நிலையான சனத்தொகையை பேண கருத்தறித்தல் வீதம் 1.3ஐ விட குறைவாக இருக்க வேண்டும் என national bureau of statistics தெரிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.