இஸ்ரேலின் புதிய பிரதமராக நாப்தாலி பென்னட் பதவியேற்பு

இஸ்ரேலின் புதிய பிரதமராக வலதுசாரி தேசியபட்டியல் உறுப்பினர் நாப்தாலி பென்னட் (Naftali Bennett) பதவியேற்றுள்ளார்.

அந்த நாட்டு முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நேற்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றதோடு அதில் எதிர்தரப்பு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

எதிர்தரப்புக்கு ஆதரவாக 60 வாக்குகளுக்குகளும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக 59 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 வருட ஆட்சி காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கு அமைய எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரையில் நாஃப்தாலி பென்னட் (Naftali Bennett) இஸ்ரேலின் பிரதமராக பதவி வகிக்கவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.