ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 19 பேர் நாடு திரும்பினர்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 19 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இலங்கையர்கள் 92 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவர்களில் 26 பேர் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஏனையவர்களை நாட்டிற்க அழைத்துவரும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, மேலும் 6 இலங்கையர்கள் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்